புதுக்குடியிருப்பில் 35 இலட்சம் கள்ள நோட்டு அச்சிட்டவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையைச் சேர்ந்த 42 வயதுடைய குறித்த நபர் திருமணம் செய்து தேவிபுரம் பகுதிக்கு வந்து செல்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் இரண்டாவது தடவையாக கள்ளநோட்டு சம்பவத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர் கடந்த 08.09.2022 அன்று திருகோணமலை குச்சவெளிப்பகுதியில் கள்ளநோட்டுடன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 09.03.2023 அன்று கள்ளநோட்டுக்களை அச்சிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் கள்ளநோட்டு அச்சிடம் இயந்திரம் ஒன்றும் அச்சிடப்பட்ட 5,000 ரூபா தாள்கள் 700 உம் மீட்கப்பட்டுள்ளன.
இதையடுத்து குறித்த சந்தேகநபரை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.