காத்தான்குடியில் விசேட அதிரடிப்படையினரால் 4 கிராம் 770 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது.


(கனகராசா சரவணன்)





காத்தான்குடி கடற்கரை வீதியில் வியாபாரத்துக்கா மோட்டர் சைக்கிளில் 4 கிராம் 770 மில்லிக்கிராம்  ஜஸ் போதை பொருளை எடுத்துச் சென்ற வியாபாரி ஒருவரை விசேட அதிரடிப்படையின் நேற்று திங்கட்கிழமை  (06) இரவு மடக்கிபிடித்து கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அதிரடிப்படை கட்டளைத்தளபதி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருணஜெய சுந்தரவின் ஆலோசனைக்கமைய அதிரடிப்படை அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஏ.டி.டி. நெத்தசிங்கவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு பிராந்திய  உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி. வெளிட்டவிதான கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.டீ.சி.எஸ்.ரத்நாயக்காகவின் அறிவுறித்துக்கமைய
 
உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம். டயஸ் தலைமையிலான  சப்இன் பெக்ஸ்டர் சி.நிஸங்க, பி.எஸ். பண்டார 13443, பெரேரா 71664, அபயரத்ன 75812, நிமேஸ் 90699, குணபால 19401, மசாச்சி 90616 ஆகிய குழுவினர் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் காத்தான்குடி கடற்கரை வீதியில்  பள்ளிவாசலுக்கு அருகாமையில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.  

இதன் போது  மோட்டர் சைக்கிள் ஒன்றில்  வியாபாரத்துக்காக ஜஸ் போதை பொருளை எடுத்துக் கொண்டு வந்து வியாபரியை விசேட அதிரடிப்படையின் சுற்றிவளைத்து மடக்கிபிடித்து கைது செய்ததுடன் ஜஸ் போதை பொருளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரையும் ஜஸ்போதை பொருள் மற்றும் மோட்டர்சைக்கிள் ஒன்றையும்   அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.