கனகராசா சரவணன்
மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இருந்து
கொழும்பிற்கு முச்சக்கரவண்டியில் 5 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கல் ஒன்றை
கடத்திச் சென்ற நிலையில் மட்டக்களப்பு குட்புறுமூலைச் சந்தியில் வைத்து
பொலிசாருடன் கடற்படை புலனாய்வு பிரிவினருடன்
இணைந்து இருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடற்படை
புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கும்புறுமூலை சந்தியில்
வாழைச்சேனை பொலிசாருடன் புலனாய்வு பிரிவினர் சம்பவதினமான நேற்று இரவு
கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்
இதன் போது மட்டு
கல்லடியில் இருந்து ஓட்டமாவடி நாவலடிசந்திவரை முச்சக்கரவண்டியில் சென்று
அங்கிருந்து பஸ்வண்டி மூலம் கொழும்பிற்கு சட்டவிரோதமாக மாணிக்கல்லை கடத்தி
செல்லதற்காக முச்சக்கரவண்டியில் பிரயாணித்த இருவரை கண்காணிப்பில்
ஈடுபட்டுவந்த பொலிசார் மடக்கிபிடித்து இருவரை கைது செய்ததுடன் சுமார் 5
கோடி ரூபா பெறுமதியான மாணிக்க கல்லையும் முச்சக்கரவண்டி ஒன்றையும்
மீட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கல்லடி மற்றும்
திருகொணமலை பிரதேசத்தைச் செர்ந்தவர்கள் எனவும் இவர்களை விசாரணையின் பின்னர்
நீதிமன்றில் அஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார்
தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருக்கின்றனர்.