கடனட்டையைத் திருடி ரூ. 600,000 மோசடி.

 


 

கடனட்டையைத் திருடி ரூ. 600,000 மோசடி செய்ததாக 33 வயது பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

படபொல பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

33 வயதுடைய சந்தேக நபர் படபொல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

திருடிய கடனட்டையைக் கொண்டு 3 தங்க சங்கிலிகள் மற்றும் ஒரு கைச்சங்கிலியை குறித்த பெண் வாங்கியுள்ளதுடன் வங்கியிலிருந்து பணத்தையும் எடுத்துள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து தங்க நகைகளையும் ரூ.35,000 பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் படபொல நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர் படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.