விபச்சார விடுதி யொன்றை காவல்துறையினர் சுற்றிவளைத்ததில் நான்கு பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 


 

பிரபல நடிகை ஒருவரால் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கண்டி மாபானாவத்துறையில் வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி யொன்றை காவல்துறையினர் நேற்றையதினம் சுற்றிவளைத்ததில் நான்கு பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக கண்டி குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.