குடும்பி மலை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, 8 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

 


மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடும்பி மலை மீரானகடவைப் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, 8 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.


காலைக்கடனை முடிப்பதற்காக வீட்டிலிருந்து 300 மீட்டர் தூரத்திற்கு அப்பாலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றபோதே, யானை தாக்கியுள்ளது.


கிரான் பிரதேசத்தில் கடந்த 17ம் திகதி குடும்பஸ்தர் ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்திருந்த நிலையில், அந்தச் சம்பவம் இடம்பெற்று
48 மணித்தியாலங்களுக்கு மற்றொருவரும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.


சந்திவெளிப் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய தம்பிமுத்து கதிரமலை என்பவரே உயிரிழந்தவராவர்.


யானை தாக்கிய பகுதிக்கு கிரான் வனஜீவராசிகள் அதிகாரிகள் வருகை தந்து நிலமைகளை அவதானித்துச் சென்றனர்.


கிரான் பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.