கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரத்தை சேர்ந்த சசிகுமார் அவருடைய மனைவி உமாவதி மற்றும் அவரது இரண்டு மகள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மகேந்திர, பார்வதி மற்றும் அவரது பேரன்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் இவ்வாறு சென்றுள்ளனர்.
மன்னாரில் இருந்து படகு மூலம் சென்று இந்தியாவின் ஆளுகையில் உள்ள 3வது தீடையில் இறங்கி நிற்பதான தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கரையோர காவல்படையினர் சென்று 8 பேரையும் மீட்டு தனுஸ்கோடிக்கு அழைத்துச் சென்று விசாரணைகளில் ஈடுபட்ட பின்னர் மண்டபம் அகதி முகாமில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இதேவேளை இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் பொருளாதார நிலைமை இன்னும் மாறவில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் உணவு பொருட்களின் விலை இன்னும் குறையவில்லை.
எனவே பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள வாழ வழியின்றி தமிழகத்திற்கு அகதியாக வந்ததாக உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது அகதியாக சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.