மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த அமிர்த ரத்தினம் ருத்திரா இன்று சாதனை பெண்ணாக தமிழ் நாட்டில் கௌரவிக்கப்பட்ட உள்ளார் .

 


 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நந்தவனம் பவுண்டேஷன் நடத்தும் சாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழா இன்று ஞாயிற்று கிழமை 2023-03-12-ம்  திகதி சென்னையில் நடை பெற உள்ளது , இவ் விழாவில் ஸ்ரீலங்கா கிழக்கு களுதாவளையை சேர்ந்த அமிர்த ரத்தினம் ருத்திரா சாதனை பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார் ,

 இவர் களனி  பல்கலைக்கழக மாணவி என்பதோடு  தனது இளம் வயதில் இருந்தே பல்வேறு சமூக சேவை மற்றும் நீதிக்காக குரல் கொடுத்த ஒரு போராளி என்பது குறிப்பிடத்தக்கது .