மின்சார சபையை தனியார் தரப்பினருக்கு வழங்குவதற்கு அனுமதிக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால், தெரிவித்துள்ளார். அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் தங்களுக்கு எந்த கொடுக்கல்வாங்கலும் இல்லை எனவும் மின்சார சபையை விற்பனை செய்வதற்கு முயற்சித்தால் அந்த நடவடிக்கை முறியடிக்கப்படும் எனவும் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.