மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம்,
பெரியவட்டவான் இலுக்கு ஆகிய கிராமங்களில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட
நிலையில்,
மீன் மற்றும் விறகு விற்று வாழ்வாதாரத்தைக் கொண்டு நடாத்தும் தெரிவு
செய்யப்பட்ட பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் நிதி உதவியுடன் ஏறாவூர்பற்று – செங்கலடி பிரதேச செயலகத்தின் ஊடாக 10 பயனாளிகளுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.
செங்கலடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்.