மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு முன்னாள் உள்ள வாவியில் பெண்ணொருவரின் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளது .

 

 




 மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் பெண்ணொருவர்  சடலமாக இன்று (26) ஞாயிற்றுக்கிழமை   மீட்டுள்ளதாக மட்டக்களப்பு  தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமொன்று நீரில் மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவல் அடுத்து. சம்பவ இடத்துக்குச்  சென்று ​பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற் கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.