கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு "ஊடக தர்மத்தை வலுப்படுத்துவதன் ஊடாக வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல்" செயலமர்வு.

 

 
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்களுக்கான ஊடக தர்மத்தினை வலுப்படுத்துவதன் ஊடாக வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல் தொடர்பான செயலமர்வு இடம்பெற்றது.
"ஊடக தர்மத்தை வலுப்படுத்துவதன் ஊடாக வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல்" எனும் தொனிப் பொருளில் இரண்டு நாட்களைக் கொண்டமைந்த செயலமர்வு மட்டக்களப்பு ஆனந்த சாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
HELVETAS நிறுவனத்தின் நிதி அனுசரணையில் LIFT மனிதாபிமான தொண்டு நிறுவனத்தினரால் "ஊடக தர்மத்தை வலுப்படுத்துவதன் ஊடாக வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல்" எனும் தொனிப் பொருளில் இளைஞர், யுவதிகளை நேரடியாக நெறிப்படுத்தும் வண்ணம் இச்செயலமர்வானது நடாத்தப்பட்டு வருகின்றது.
வெளிப்பாட்டு உரிமையும், நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும் எனும் தலைப்பில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் LIFT மனிதாபிமான தொண்டு நிறுவனத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்வில் பங்குபற்றிய மாணவ மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது.
இதன்படி, இரு நாட்களாக இடம்பெற்ற மேற்படி செயலமர்வின் வளவாளர்களாக திருமதி நஸ்ரியா மற்றும் எம்.ருக்க்ஷிக்கா கலந்து கொண்டதுடன் லிப்ட் நிறுவன அதிகாரி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும் தொடர்பான தெளிவுறுத்தல்களை வழங்கி இருந்தனர்.