மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளது.

 

 


ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தை போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளது.

நாடாளுமன்ற குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பாக ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்திற்கு எவ்வாறான பாடங்களை கற்றுகொள்ள முடியும் என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கையில் இருந்தது போன்றதொரு நிலைமையினையே தமிழ் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்து நாடாளுமன்றை போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் ஸ்கொட்லாந்து நாடாளுமன்றில் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசவுள்ளதாக Kenneth J Gipson உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இலங்கைக்கான விஜயம் செய்யும்போது தமிழ் தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.