மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுவின் முதலாவது காலாண்டிற்கான சிறுவர்கள் நலன்
தொடர்பில் ,கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில், உதவி மாவட்ட செயலாளர் நவேஸ்வரனின்
ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது
சிறுவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள்,பாதுகாப்பு இல்லங்களில் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கான
பிறப்பு பதிவினை பெற்றுக்கொள்ளல், பாடசாலைக்கட்டாய கல்விகுழு மற்றும் பாடசாலையிலிருந்து
இடைவிலகிய மாணவர்களை பிரதேச செயலகங்களூடாக மீளச் சேர்த்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன
;நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அலுவலகத்தின் உளநல வைத்திய
அதிகாரி டான் சௌந்தரராஜா மற்றும் பிரதேச செயலாளர்கள்,உதவி பிரதேச
செயலாளர்கள் ,வலய கல்வி பணிப்பாளர்கள்,பொலிஸ்அதிகாரிகள் என பலர் கலந்து
கொண்டனர்.