நாடு, நிலையானதன் பின்னர் தேர்தல் நிச்சயம் நடக்கும்- ஜனாதிபதி

 



 

பாராளுமன்றத்தில் இன்று (07) விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பிலும் அறிவித்தார்.

நாடு, நிலையானதன் பின்னர் தேர்தல் நிச்சயம் நடக்கும் என்றார். நாட்டின் பொருளாதாரத்தை நிலையானதாக்குவதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுடன் கைகோர்க்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, நாடு நிலையானதும் தேர்தல் நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.