மீண்டும் வாகன இறக்குமதி சாத்தியமாகுமா ?

 


 

 வாகனங்களை மீள இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் எதிர்காலத்தில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக அதன் தலைவர் சாந்த கமகே எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

வாகன இறக்குமதி தொடர்பான தீர்மானங்களை தம்மால் மேற்கொள்ள முடியாது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார். அதனை நிதியமைச்சே இறுதி செய்ய வேண்டும்.

எனவே குறித்த செயற்பாடுகள் நிதியமைச்சின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும் என்பதால் எதிர்காலத்தில் நிதியமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த கமகே குறிப்பிட்டுள்ளார்.