மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலய மாணவர்களின் ஆரோக்கியம் தொடர்பாகப் பரிசீலனை செய்யும் பொருட்டு, வைத்தியப் பரிசோதனை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லடிப் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சோதிராஜா அமிர்தாப் தலைமையில் நடைபெற்ற இவ் வைத்தியப் பரிசோதனையில் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலை எலும்பு முறிவுச் சிகிச்சை நிபுணர் கே.மாதவன் மற்றும் பாடசாலைகளுக்கான பற்சிகிச்சை வைத்தியர் எம்.எம்.ஐ. அகிலா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் கண்குறைபாடு, பற்சுகாதாரம், உடல்- உளச்சுத்தம் மற்றும் நிறை, உயரம் போன்றவற்றைப் பரிசோதித்தனர்.
இதன்போது தரம் -01 தொடக்கம் தரம் - 11 வரையிலான மாணவர்களின் ஆரோக்கியம் தொடர்பாகப் பரிசோதனை செய்யப்பட்டது.