அம்பிளாந்துறை வில்லுக்குளம் நீரோடையில் தவறி வீழ்ந்த இளைஞர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.


 

 

 மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை வில்லுக்குளம் நீரோடையில் தவறி வீழ்ந்த இளைஞர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், ஆர்.கே.எம்.பாடசாலை வீதி கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த ரீ.கவிசாந் என்பவரே உயிரிழந்தவராவர்.
உயிரிழந்த இளைஞன் சம்பவ தினத்தன்று கல்முனை பிரதேசத்தில் இருந்து தனது சொந்த வேலையின் பொருட்டு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை நோக்கி சென்று,
பின்னர் தங்களது வேலைகளை முடித்து விட்டு, அம்பிளாந்துறை வில்லுக்குள வீதியூடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருக்கும் போது நீர் நிரம்பிய குழியில்
வீழ்ந்துள்ளார்.
நீர் நீரம்பிய குழியிலிருந்து இளைஞன் மீட்கப்பட்டு, மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் பீற்றர் போலின் உத்தரவுக்கமைய, மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் விசாரணைகளை
முன்னெடுத்த நிலையில், சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்குட்படுத்துமாறும் உத்தரவிட்டார்.