மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் உத்தியோகத்தர்களுக்கான விசேட நடமாடும் மருத்துவ முகாம் மட்டக்களப்பு மண் முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இலங்கை குடும்பத் திட்டமிடல் சுகாதார சேவை நிலையத்துடன் இணைந்து பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் இடம் பெற்ற மருத்துவ முகாமில், மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் மாதவன் உட்பட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தாதிய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவ முகாமில் பிரதேச செயலத்தில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்களுக்கான தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.