மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தக் கொடையாளர்களிற்கு வழங்குவதற்காக ஒரு தொகைப் பால் பக்கற்றுக்கள் ஹெல்ப் எவர் அமைப்பினரால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
மட்டு இரத்த வங்கியின் வேண்டுகோளிற்கிணங்க வைத்தியசாலைக்கு வருகை தந்து குருதி கொடை அளிப்பவர்களின் தாகம் தீர்க்கும் உன்னத நோக்கில் 60 பால் உணவுப் பொதிகள் ஹெல்ப் எவர் அமைப்பின் அங்கத்தவர்களால் இரத்த வங்கி பொறுப்பதிகாரர்களிடம் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.