சிகிரியாவை நிலையான சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது .

 


இலங்கையின் முக்கிய தொல்பொருள் மதிப்புமிக்க இடமான சிகிரியாவை நிலையான சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உலக பாரம்பரிய தளமாகவும், இலங்கையின் முக்கிய தொல்பொருள் தளமாகவும் விளங்கும் சீகிரியா, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் இடமாகவும், அதிக வருமானம் ஈட்டும் இடமாகவும் உள்ளது.

 அதனால் ஏற்படும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன், சிகிரியாவை நிலையான சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்வது முக்கியமானது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு திட்டத்தை தயார் செய்ய சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் மற்றும் புத்தசாசன கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.