தொழில் பயிற்சி அதிகாரசபை மாணவர்களுக்கு ஊடகப்பாவனை தொடர்பான இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை!!






வெளிப்பாட்டு உரிமை மற்றும்  நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனை  தொடர்பான விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக "ஊடக தர்மத்தை வலுப்படுத்துவதன் ஊடாக வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல்" எனும் தொனிப் பொருளில் LIFT மனிதாபிமான தொண்டு நிறுவனத்தினரால் நடத்தப்படும் செயலமர்வின் மற்றுமொரு கட்டமாக களுவாஞ்சிக்குடி தொழில் பயிற்சி நிலைய  மாணவர்களுக்கு  முன்னெடுக்கப்பட்டது.

இளைஞர்கள் மத்தியில்  சமூக ஊடகப் பாவனை அதிகரித்து வரும் இக்காலத்தில், ஊடகதர்மம், ஊடகம் தொடர்பான சட்டங்களைப் பற்றிய தெளிவு இச்செயலமர்வில் வளவாளர்களினால்  வழங்கப்பட்டது. ஆரோக்கியமான சமூக ஊடக பாவனையின்  மூலம் சிறந்த பெறுபேறுகளை பெறமுடியும் என இதன் போது வளவாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.


HELVETAS நிறுவனத்தின் நிதி அனுசரணையில் ஊடக தர்மத்தை வலுப்படுத்துவதன் ஊடாக வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல்" எனும் தொனிப் பொருளில் LIFT மனிதாபிமான தொண்டு நிறுவனத்தினரால்  மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக  இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


இச் செயலமர்வில்  கலந்து கொண்ட மாணவர்களுக்கு பெறுமதியான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் தொழில் பயிற்சி அதிகாரசபையின்   தேசிய  தொழில் பயிற்சி   பிரதி பணிப்பாளர்  வி.கனகசுந்தரம், களுவாஞ்சிகுடி தொழில் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ஜீ .மயூரன் மற்றும் LIFT  நிறுவன உத்தியோகத்தர்  வி.கண்ணன்  வளவாளர்களாக ஊடகவியலாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களுமான உதயகுமார் உதயகாந்த், கே.ருத்திரன் ஆகியோர் செயற்பட்டனர்.