காதலியுடன் கடுமையாக கோபித்துக்கொண்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன், தன்னுடைய காதலியான பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண படங்களை, காதலியின் குடும்பத்தினருக்கு அனுப்பிவைத்துள்ள சம்பவத்தை அடுத்து அந்தக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலியின் குடும்பத்தினருக்கு வட்ஸ்அப் ஊடாகவே, காதலியின் நிர்வாணப் படங்களை காதலன் அனுப்பிவைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸாரினால் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விருவரும் பல்கலைக்கழங்களில் கல்விப்பயிலும் மாணவர்கள் ஆவர், நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், காதலன் தனக்கு பொருத்தமானவர் அல்லர் என்பதை உணர்ந்த காதலி, காதலை நிறுத்திக்கொள்வோம் எனக் கேட்டுள்ளார்.
அதற்கு இணங்க மறுத்த காதலின், தன்னை தொடர்ச்சியாக காதலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். எனினும், அதற்கு இணங்க காதலி மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த காதலன், தான் ஏற்கெனவே கையடக்க தொலைபேசியில் எடுத்துவைத்திருந்த காதலியின் நிர்வாணப் படங்களை, காதலியின் வீட்டாருக்கு வட்ஸ்அப்பின் ஊடாக அனுப்பிவைத்துள்ளார்.
இதுதொடர்பில் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டு அமையவே,
எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். காதலி,
நிக்கரவெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.