அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிராக நேற்று காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்றுடன் கைவிடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, இன்று காலை 8 மணியின் பின்னர் அனைத்து வைத்தியசாலைகளின் செயற்பாடுகளும் வழமைப்போல் இயங்கும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.