நாளை முதல் பால்மாவின் விலை குறையுமா ?

 


பால்தேநீர் கோப்பை ஒன்றின் விலையை நாளை முதல் 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

இதற்கமைய பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலை 90 ரூபாவாக குறைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாளை முதல் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவாலும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.