மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதம கணக்காளருக்கு பதவி உயர்வு.











மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதம கணக்காளரின் பதவி உயர்வினை முன்னிட்டு பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதம கணக்காளராக கடமையாற்றி வந்த திருமதி.இந்திராவதி மோகன் வெகுசன ஊடக அமைச்சிற்கு தலைமை நிதி அதிகாரியாக எதிர்வரும் 07ஆம் திகதி கடமையை பொறுப்பேற்கவுள்ள நிலையில் இவருக்கான பிரியாவிடை கௌரவிப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

1989ம் ஆண்டு வடகிழக்கு மாகாண சபையின் நீர்ப்பாசன மற்றும் வீடமைப்பு அமைச்சில் முதல் நியமனம்  பெற்று அரச சேவையில் இணைந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து 1992ம் ஆண்டு கணக்காளர் சேவையில் இணைந்து கொண்ட இவர்  ஏறாவூர் நகர் பிரதேச செயலகம், வீதி அபிவிருத்தி திணைக்களம், கிழக்கு மாகாண திறைசேரி, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரதி உள்ளக கணக்காய்வாளராக கடமையாற்றி, 2022 ஆம் ஆண்டு பிரதம கணக்காளராக  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பதவி உயர்வு பெற்று கடமையாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிராந்தி சுகாதார சேவைகள் அலுவலகத்தின்   கடமையாற்றிய போது  குழுச்செயற்பாட்டில் பங்கு பற்றி அகில இலங்கையில் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அரச கணக்கியலில்  டிப்ளோமா, சமூகவியல் முதுமாணி, அபிவிருத்தி பொருளாதார முதுமணி பட்டங்களை  பெற்றுள்ள இவரிற்கான சேவை நலன் பாராட்டு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்சினி ஶ்ரீகாந்த், திருமதி.நவருபரஞ்சினி முகுந்தன் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.புண்ணியமூர்த்தி சசிகலா  மற்றும் பதவி நிலை உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.