"அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்" எனும் கருப்பொருளாக கொண்டு சர்வதேச மகளிர் தினத்தினை சிறப்பிக்கும் நிகழ்வும் அதனுடன் "நிஸா" கன்னி நூல் வெளியீடும் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் தலைமையில் பிரதேச செயலக பெண்கள் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜெ.காபிலா மற்றும் ரி.மபாஹிறா ஆகிய இருவரின் ஒழுங்கமைப்பின் கீழ் ஏறாவூர் நகர பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
கோவிட் தொற்றுக் காலங்களில் உயிர்காக்கும் பணியினை செம்மையாக நிறைவேற்றியமைக்காக பிரதேசத்தின் பெருமைக்குரிய பெண் எனும் விருது ஏறாவூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பாத்திமா சாபிறா வஸீம் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மகளிர் தின சிறப்பு மலரான நிஸா கன்னி மலர் வெளியிடப்பட்டதுடன் மலர் வெளியீட்டு நிகழ்வில் பிரதேசத்தை சேர்ந்த படைப்பாளிகள் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.ஏ.அப்கர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ.எச்.சிஹானா மற்றும் கணக்காளர் திருமதி.ரி.வினோதன், நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.றஹீம், மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.எம்.எம்.நபீஸ்,சமுர்த்தி முகாமையாளர் கே.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.