தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வும் விழிப்புணர்வு பேரணி இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.









கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமதி.சுசிலா அருள்தாஸ் தலைமையில் மகளிர் தின விழிப்புணர்வு பேரணியானது மட்டக்களப்பு கோட்டைமுனை பாலத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமாகி பிரதான நிகழ்வுகள் இடம்பெறும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை அலுவலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த விழிப்புணர்வு பேரணியில்  இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.

குறித்த பேரணியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அதிகளவிலான பெண்கள் கலந்து கொண்டதுடன், பெண்களுக்கான உரிமை கோரிக்கைகள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி, கோசங்களை எழுப்பியவாறு கலந்துகொண்டிருந்தனர்.

விழிப்புணர்வு பேரணியின் நிறைவில் பிரதான நிகழ்வுகள் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் கட்சியின் முன்னால் தலைவர் உள்ளிட்ட மறைந்த கட்சியின் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, மகளீர் உறுதியுரை, வரவேற்பு நடனம், சிறப்புரைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் மகளீர் தின சிறப்புரையினை தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

குறித்த மகளீர் தின நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.