மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட மின் தகனசாலையின் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 


மட்டக்களப்பு மாவட்டத்தின் அவசிய தேவையாக காணப்படும் மின் தகனசாலையினை அமைக்க வேண்டும் என்ற மட்டக்களப்பு மாநகர சபையின் தீர்மானத்துக்கு அமைய,
கள்ளியங்காடு இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட மின் தகனசாலையின் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

 மட்டக்களப்பு மாநகர சபையின் 40 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில், நிர்மாணிக்கப்பட்ட மின் தகன சாலையின் செயற்பாடுகளை நேற்றைய தினம் மட்டக்களப்பு மாநகர சபையின்
ஆணையாளர் நா.மதிவண்ணன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.