அகிம்ஷா நிறுவனத்தின் பரிந்துரைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் சமூக பணியின் கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு கிராம சேவையாளர் பிரிவில் ஐயப்பன் இல்லம் கையளிக்கப்பட்டது.
ஐயப்பன் இல்ல அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் என்.சந்திரமோகனின் ஒழுங்கமைப்பில் கனடா ஐயப்பன் இல்ல பக்தர்களான ஜெஜோதி, தேவன் ஆகியோரின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்ட வீடு மற்றும் மலசலகூடம் என்பன பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.
அகிம்ஷா சமூக நிறுவனத்தின் நிறைவேற்றுச் செயலாளர் டி. ராஜமோகன் தலைமையில் வீடு கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காளி கோயில் வீதி கொடுவாமடு கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற புவனேந்திரன் சீதா என்ற பயனாளிக்கே வீடு கையளிக்கப்பட்டது.
வீடு கையளிக்கும் நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம், கிராம சேவை உத்தியோகத்தர் மோகனகுமார், அகிம்ஷா நிறுவன நிதிக்குழு உறுப்பினர் விநாயகமூர்த்தி ஜீவ ராஜா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.