மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு களப்பு பகுதியில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விஜிதரராஜ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவர்.
இவர் திருப்பெருந்துறையில் இருந்து நேற்று இரவு ஈச்சந்தீவு களப்பு பகுதிக்கு தோணியில் வந்துள்ளார்.
தோணியில் இருந்து மது போதையில் நீர் கரையில் வீழ்ந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வருகிறது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்றர் போலின், உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.