விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான பெண் ஒருவருக்கு, போலி ஆவணங்களுடன் வெளிநாடு செல்வதற்கு உதவியதாக கூறப்படும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) கைது செய்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த குறித்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர், வெள்ளவத்தையில் உள்ள முகவரியில் போலி ஆவணங்களை உருவாக்கி வெளிநாடு செல்வதற்கு சந்தேகநபரான கான்ஸ்டபிள் உடந்தையாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், வெளிநாடு சென்று மீண்டும் நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரான கான்ஸ்டபிள் கொழும்பு - வாழைத்தோட்டம் காவல்நிலையத்தில் நிலையத்தில் கடமையாற்றியவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.