கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

 


மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடாத்தப்படவிருந்த, மத நிகழ்வொன்றை நிறுத்துமாறு கோரியும் மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படுவோரைக் கண்டித்தும் கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

 நேற்று   மாலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக குறித்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ க.லோகநாதன் குருக்கள் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்ககப்பட்டது.