பேருவளை மீன்பிடி துறைமுகத்தின் ஊடுக கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஐஸ், ஹெரோய்ன், கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை நீண்ட காலமாக விற்பனைச் செய்துவந்த கோடீர்வரர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
“டொக்கன் சுரேஸ்” என்றழைக்கப்படும் அந்த நபர், ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் பேருவளை விசேட பொலிஸ் பிரிவின் அதிகாரிகளால், கைது செய்யப்பட்டார்.
மாகல்கந்த பிரதேசத்தில் உள்ள அவருடைய வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது, அங்கிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்தப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.