.எதிர்வரும் தேர்தலிலும் அனைத்து மக்களும் பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதி செய்வார்கள்.மகிந்த ராஜபக்ச

 


 

 கட்சி என்ற ரீதியில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம். எனினும் சேறு பூசும் செயற்பாடுகளுக்கு நாம் எதிரானவர்களென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,“நிரூபிக்க முடியாதவற்றை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதற்கு எதிர்க்கட்சியினர் செயற்பட்டு வருகின்றனர். கிராமப்புற மக்கள் எப்போதுமே எம்முடனுள்ளனர் .எதிர்வரும் தேர்தலிலும் அனைத்து மக்களும் பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதி செய்வார்கள்.