ஹொரணை நீதிமன்ற நீதவான் சந்தன கலன்சூரிய, மதுபான வியாபாரி ஒருவருக்கு, புத்த பூஜைக்கு முன்னர் ஆலயத்தை தினமும் சுத்தம் செய்யுமாறும், விகாராதிபதியிடம் திறந்த நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோருமாறும் உத்தரவிட்டார்.
அதற்கு மேலதிகமாக சந்தேக நபரை 500,000 ரூபா பிணையில் விடுவிக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.
விகாரையை அண்டிய காணியில் வசிப்பதாக சந்தேகிக்கப்படும் மதுபான வியாபாரி தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அகுருவத்தோட்ட காவல்துறையினர் சுற்றிவளைத்து மதுபானத்துடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
விஹாராதிபதி தகவல் கொடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகித்த சந்தேகநபர், விஹாராதிபதி தேரருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
குறித்த நடவடிக்கை தொடர்பில் காவல்துறையினர் சந்தேகநபரை நீதிமன்றின்
கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து, சந்தேகநபர் திறந்த நீதிமன்றில்
விஹாராதிபதி தேரரை வணங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.