புகையிரதக் கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

 


டீசல் விலை குறைந்துள்ள போதிலும், புகையிரதக் கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்படவில்லை என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.

பேருந்து கட்டணத்தை ஒப்பிடும் போது ரயில் கட்டணங்கள் 50 வீதம் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.