காட்டு யானைகள் கிராமங்களில் அட்டகாசம் .

 

 


 

மட்டக்களப்பு மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமத்தில் நேற்று இரவு ஊடுருவிய காட்டு யானைகள் கிராமவாசி ஒருவரின் வீட்டை உடைத்து சேதமாக்கியுள்ளன.


வீட்டினை உடைத்து வீட்டில் இருந்த அரிசி, நெல், கச்சான் போன்ற உணவுப் பொருட்களை உண்டதோடு, வீட்டிலிருந்த உடமைகளையும் சேதப்படுத்தியுள்ளது.
இதேவேளை அப்பகுதியில் பாலர் பாடசாலை ஒன்றும் காட்டுயானைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

பாதிப்புக்கள் தொடர்பில், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம் நேரில் சென்று ஆராய்ந்தார்.


வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களும் யானைகளால் சேதமாக்கப்பட்ட வீட்டினைப் பார்வையிட்டனர்.


இதேவேளை மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கூரை விரிப்புக்கள், சமயல் பாத்திரம், அரிசி போன்ற பொருட்கள்
இன்று வழங்;கப்பட்டன.