எதிர் வரும் காலங்களில் இந்த நாட்டிற்கு மின்னியல் வாகனங்களை மட்டுமே இறக்குமதி.

 


 

வாகன இறக்குமதிக்கான அனுமதி கிடைத்தால் மின்சார மகிழுந்துகளை மட்டுமே இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், நாட்டுக்கு அனுப்பும் அந்நியச் செலாவணியின் அளவைப் பொறுத்து மின்சார மகிழுந்துகளை இறக்குமதி செய்யும் வசதியை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 

இதற்கு அமைச்சரவை முழுமையாக ஆதரவளித்தது. இதில் சில அமைச்சர்கள் ஹைபிரிட் மகிழுந்துகளை இறக்குமதி செய்ய முன்மொழிந்தனர்.

மேலும் பெட்ரோல் மகிழுந்துகளை இறக்குமதி செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி செல்ல வேண்டும்.

தற்போது மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த எமது இலங்கைத் தொழிலாளர்களுக்கு நாம் வழங்கும் கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் நீங்கள் பார்க்கலாம்.

இதன் காரணமாக மின்னியல் வாகனங்களை நோக்கி செல்ல வேண்டும் என அரசின் சில முடிவுகளும் உள்ளன. அதனால் தான் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

 

எதிர் வரும் காலங்களில் இந்த நாட்டிற்கு மின்னியல் வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய முடிவெடுப்போம்.

எதிர்காலத்தில் நாட்டிற்கு இறக்குமதியாகும் அனைத்து வாகனங்களும் மின்சார வாகனங்களாக மட்டுமே இருக்கும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பிரத்தியேகமாக 'ஹோப் கேட்' என்ற புதிய சிறப்பு விருந்தினர்களுக்கான வாயில் திறக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.