மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சிறு சந்தை மினி பெயார்" எனும் தொனிப்பொருளில் செயலக வளாகத்தில் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ஒழுங்கு செய்யப்பட்டது.
இதில் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பங்கேற்று, காட்சிப் படுத்தப்பட்ட உற்பத்திகளை சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.