பிறைந்துறைச்சேனை மாதிரி கிராமத்தில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படு்த்த சிரமதானமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மத்தி பிறைந்துறைச்சேனை 206சி சமுர்த்தி மாதிரி கிராமத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.சி.சாதிக்கீன் ஏற்பாட்டில் பிரதேசத்தில் பெருகிவரும் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படு்த்த சாதுலியா வித்தியாலயம், பரகத்பள்ளிவாயல், ரெயில்வே வீதி, பன்சாலை வீதி ஆகிய இடங்களில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
200 ற்கு மேற்பட்ட சமுர்த்தி பயனாளிகள் இச் சிரமதான துப்பரவு பணிகளில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.