மட்டக்களப்பு மண்முனை பற்று புதுக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய புனராவர்த்தன அஸ்ட பந்தன மகா கும்பாபிஷேக எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வுகள் மிக சிறப்பாக நடைபெற்றது .
அதிகாலை 4.30 மணிக்கு பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகிய நிலையில், நேற்று காலை 5 மணிக்கு விக்ன கணபதி வழிபாட்டுடன், புண்ணியாக வசனம் என்பவற்றோடு, எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு ஆரம்பமாகியது.
உரும்பிராய் மேற்கு ஸ்ரீ நாகபூஷனி அம்மன் தேவஸ்தான பிரதம குரு, ஆதி சைவ வழித் தோன்றல், கிரியாரெத்தினம், சாதக சிம்மம், தற்புருஷ சிவாச்சாரியர் சிவப்பிரம்ஸ்ரீ இரா.கந்தசன் நிர்மலேஸ்வரக் குருக்கள் தலைமையில் கும்பாபிஷேக கிரியைகள் இடம்பெற்று வருகின்றன.
பங்குனித் திங்கள் 10ம் நாளான நாளைய தினம் காலை 06 மணிக்கு விநாயகர் வழிபாட்டு;டன் கிரியைகள் ஆரம்பமாகி, புண்ணியாக வாசனம், யாக பூஜை, நவாக்கினி வழிபாடு, மஹா பூர்ணாகுதி, தீபாராதணை போன்ற கிரியைகள் மற்றும் வழிபாடுகள் இடம்பெற்று, கும்பவீதிப்ரதகூஷணத்துடன், முற்பகல் 9.19 மணி முதல் 10.41 மணி வரையுள்ள சுப முகூர்த்த வேளையில், பிரதான கும்பங்கள் வீதியுலா வந்து, சுபவேளையில், தூபி அபிஷேகம், மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.