வாகன இறக்குமதிக்கான தடை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் தளர்த்தப்படுமா ?

 


ஐஎம்எப் இன் கடன் வழங்கப்பட்ட போதிலும், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதி வழங்கபடவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய வங்கியின் ஆளுனர் மற்றும் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை வாகன இறக்குமதி செய்வதற்கான அனுமதி கிடைக்கவில்லையெனவும் குலதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, வாகன இறக்குமதிக்கான தடை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் தளர்த்தப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.