இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.

 


இன்று நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 மேல் மாகாணத்தில் சில பிரதேசங்களிலும் சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.