உதைபந்தாட்டப் போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி சம்பியன் பட்டத்தைச் சூடிக்கொண்டது .

 

 





 காத்தான்குடி கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில்  நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில்  காத்தான்குடி மத்திய கல்லூரி சம்பியன் பட்டத்தைச் சூடியுள்ளதாக காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் எம்.ஏ.நிஹால் அஹமட் தெரிவித்தார்.

காத்தான்குடி கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில்  நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில்
16, 18, 20 ஆகிய வயதுக்குட்பட்ட 03 அணிகளும் சம்பியன் பட்டத்தைச் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அத்தோடு  நடைபெற்ற கோட்ட மட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரியினுடைய
18 வயதுக்குட்பட்ட அணியினர் சம்பியனாகவும், 20 வயதுக்குட்பட்ட அணி இரண்டாவதாகவும் தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இப்பெருமையை பாடசாலைக்குப் பெற்றுத் தந்த மாணவர்களுக்கும் இதற்காக பாடுபட்ட, பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளருக்கும், உதவி ஒத்தாசை வழங்கிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர் ஆகியோருக்கு பாடசாலை சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என காத்தான்குடி மத்திய கல்லூரி அதிபர் எம்.ஏ.நிஹால் அஹமட் தெரிவித்தார்