மட்டக்களப்பில் முதியோருக்கான வீடமைப்பு திட்டம்!!

 



திரிய பியச என்ற முதியோருக்கான வீடமைப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தியாவட்டவான் கிராமத்தில் முதியோருக்கான வீடு  பிரதேச செயலாளரினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முதியோரின் நலன்களைப் பேணுவதில் சகலரும் முன்னின்று செயற்படுவதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இத்திட்டம் 60 வயதிற்கு மேற்பட்ட, மாதாந்தம் 6,000 ரூபா விற்கு குறைந்த வருமானம் பெறும், முதியோர்களுக்கு புதிதாக வீடு நிர்மாணித்தல் அல்லது புதுப்பித்தலுக்காக சமூக பாதுகாப்பு நிதியிலிருந்து அதற்கான நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.
அதற்கிணங்க கையளிக்கப்பட்ட இவ்வீட்டிற்கு 5 இலட்சம் ரூபா நிதி தேசிய முதியோர் செயலகத்தினால் செலவிடப்பட்டுள்ளது.
முதியோர் நல்வாழ்வினை உறுதிப்படுத்தும் வகையில் முதியோருக்கான தேசிய செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவிப் பிரதேச செயலாளர், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு, சமூக சேவைகள், பொருளாதார, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தியாவட்டவான் கிராம சேவை அலுவலர் என பலரும் கலந்து கொண்டனர்.