இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) மற்றும் இலங்கை மின்சார சபை (இ.மி.ச) ஆகியவற்றின் மறுசீரமைப்பு செயல்முறையை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், சீனாவின் சினோபெக் மற்றும் சைனா மெர்ச்சன்ட்ஸ் குழுமம் ஆகியவை இலங்கையில் முதலீடு செய்ய கவனம் செலுத்தி வருவதாக அறியமுடிகிறது.
பெற்றோலியம், இரசாயனங்கள், வர்த்தகம், துறைமுகம் மற்றும் தொழில்துறை பூங்கா செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்சாரசபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை பல பகுதிகளாகப் பிரித்து, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
புதிய முறையின் கீழ் இலாபம் ஈட்ட தேவையான பணிகளை முடித்துள்ளதால், உத்தேச மறுசீரமைப்பு செயல்முறையை தொடருமாறு கூட்டுத்தாபனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சீனாவின் சினோபெக் குழுமத்தின் உயர் அதிகாரம் கொண்ட குழுவின் வருகை இத்தருணத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்யும் நோக்கத்துக்காக சினோபெக் இலங்கை சந்தையில் இணைய உள்ளதாக எரிசக்தி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.