ஜெல் குச்சிகளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


திருகோணமலை பேருந்து நிலையத்தில் வைத்து ஜெல் குச்சிகளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்த போதே சிக்கியுள்ளதுடன், 58 வோட்டர் ஜெல் குச்சிகள் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, 100 டெட்டனேட்டர்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள், 33 மற்றும் 34 வயதுடைய நிலாவெளி மற்றும் திருகோணமலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர்கள் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.