இலங்கையில் இந்திய ரூபாயை முற்றிலுமாக பயன்படுத்துவது சாத்தியமா ?

 


இலங்கை மத்திய வங்கி, இந்திய ரூபாய்களை இங்கு பயன்படுத்துவதற்கு அனுமதிக்கலாம் என்ற ஒரு நடைமுறை வருகின்றது என இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் நிக்சன் தெரிவித்துள்ளார். 

காலப் போக்கில் இந்திய ரூபாய்தான் முற்றிலுமாக பயன்படுத்தப்படலாம் என்ற சந்தேகமும் இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.  

இந்த நடவடிக்கைகள் எல்லாமே பொருளாதார நெருக்கடியின் பின்னர் வந்த மாற்றங்கள் தான்.  ஆனால்  இது எந்தளவிற்கு இலங்கை ரூபாவின் பெறுமதியை உயர்த்தும் அல்லது இலங்கை தன்னிறைவு பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்யும், எந்த அளவிற்கு ஏற்றுமதியை அதிகரிக்கும் என்ற கேள்விகள் இருக்கின்றன.

ஏனெனில்  அதற்கான எந்தவிதமான செயற்றிட்டங்களும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.