மட்டக்களப்பில் இடம்பெற்ற நில நடுக்கம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!!











மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களுக்கு  நில நடுக்கம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்ப மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலின் கிழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் தலைமையில்  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (07) திகதி இடம் பெற்றது.

உலகலாவிய ரீதியிலும் தேசிய ரீதியிலும் நிலநடுக்கத்தின்  தாக்கம் உணரப்படுவதனால் நில நடுக்கம் தொடர்பான  அடிப்படையான விடயங்களை சமூகத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டியதன் அவசியத்தன்மையை தொடர்பில் இதன்போது  விளக்கமளிக்கப்பட்டது.

கிழக்கு  பல்கலைக்கழக புவியியல் பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளர் ஆர்.கிருபராஜாவினால் சிறந்த முறையில் வளவாண்மை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.